நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறை அறிமுகம் ..!

575

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறை, மேலும் 242 சார்பதிவு அலுவலகங்களில் அமலுக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் 578 சார் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், பல்வேறு நடைமுறைகளை காரணம் காட்டி, அலையவிடுவதாக புகார் எழுந்தது.
இதை தொடர்ந்து, பத்திரபதிவை எளிமைப்படுத்தும் விதமாக, 152 சார் பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் மேலும் 242 சார்பதிவு அலுவலகங்களில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திர பதிவு நடைமுறை படுத்தப்படுகிறது.
ஆன்லைனில் பத்திரம் பதிவு செய்ய முதலில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் குறிப்பிட்ட தேதியில் அசல் ஆவணங்களை கொண்டு வர பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.