ஓ.என்.ஜி.சி. உடனடியாக வெளியேற வேண்டும்-வைகோ – மதிமுக பொதுச் செயலாளர்!

325

போராட்டத்தைத் தூண்டி விடுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் என்மீது வழக்குப் போட்டால் அதை சந்திக்கத் தயார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற விட்டால், அதன் வாகனங்களை அடித்து நொறுக்கி ஓட, ஓட விரட்டுவோம் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்தார். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.