திருச்செந்தூர் அருகே ஆய்வு மேற்கொண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவன கருவிகள், அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அப்புறப்படுத்தப்பட்டன.

244

திருச்செந்தூர் அருகே ஆய்வு மேற்கொண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவன கருவிகள், அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அப்புறப்படுத்தப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணிநகர் ஆற்றுப்பாலம் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில், செயற்கைக்கோள் மூலம் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள். ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்களிடன் கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கருவிகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி போரட்டம் செய்தனர். இதையடுத்து, ஆய்வுக்கு பயன்படுத்திய கருவிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.