முதலமைச்சர் கூறியபடி அனுமதி இல்லாமல் இயங்கும் கதிராமங்கலம் ஒ.என்.ஜி.சியை…

389

முதலமைச்சர் கூறியபடி அனுமதி இல்லாமல் இயங்கும் கதிராமங்கலம் ஒ.என்.ஜி.சியை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எரிவாயு எடுக்கும் இடத்தை சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பார்வையிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்துள்ளது சட்ட விரோதமானது என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.