இந்தியாவின் மிக மோசமான நிறுவனமாக ஒஎன்ஜிசி திகழ்கிறது என்று கதிராமங்கல போராட்டம் குறித்து ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது.

221

இந்தியாவின் மிக மோசமான நிறுவனமாக ஒஎன்ஜிசி திகழ்கிறது என்று கதிராமங்கல போராட்டம் குறித்து ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ளது.
கதிராமங்கலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒஎன்ஜிசிக்கு எதிராக, போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உண்மைகளை கண்டறியும் நோக்கில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வந்தது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்த குழு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர் கதிராமங்கல மக்களை சந்தித்திருந்தால் போராட்டத்தை தடுத்திருக்கலாம் என்றும், இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலச்சிய போக்குதான் காரணம் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்தியாவின் மிக மோசமான நிறுவனம் ஒஎன்ஜிசி என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.