அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் ?

239

அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் விலகியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதிமுகவில் இருந்துவிலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா பேரவை இணைச்செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமை செயலகத்திற்கு அவர் விலகல் கடிதத்தை அவர் அனுப்பி இருக்கிறார். தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
அமைச்சர் கே.சி.கருப்பணன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை தோப்பு வெங்கடாசலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.