ஒரே தேசம் ஒரே தேர்தல் கொள்கை

நாடாளுமன்றத்திற்கும் சட்டபேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூர்கள் குறித்து ஆலோசிக்க இன்று சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது…

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதானமாக கொண்டு நாடாளுமன்றத்திற்கும் சட்டபேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சட்ட ஆணையமும் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கும் சட்டபேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று டெல்லியில் சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 7 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் அங்கீகரிப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக சார்பிலும் பிரநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு கருத்தை முன்வைக்க உள்ளனர். ஏற்கனவே ஒரே சமயத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்த அதிமுக வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.