ஒண்டிவீரன் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

222

ஒண்டிவீரன் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவகரி அருகே நெற்கட்டும்செவலில் நாளை ஒண்டிவீரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி புலித்தேவனின் பிறந்த தினமும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க செப்டம்பர் 2ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருவிக்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஊர்வலம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கூட்டமாக வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நெல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.