பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.

169

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். தேசிய விருது, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஓம் புரி கடந்த 1950-ம் ஆண்டு ஹரியானா மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தார். காஷிராம் கோட்வால் என்ற மராத்திப் படம் மூலம் முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 1982-ல் வெளியான ஆரோஹன், 1984-ல் வெளியான அர்த் சத்யா ஆகிய படங்கள் இவருக்கு தேசிய விருதினை பெற்றுத் தந்தது. தமிழ் படமான ஹேராம் படத்திலும் கமலஹாசனுடன் சேர்ந்து அவர் சேர்ந்து நடித்துள்ளார். ஆங்கிலம் படம் மற்றும் நாடகங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஓம் புரி மறைவிற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய படங்களையும் நாடக பாலிவுட் திரையுலகினரும் அவருடைய மறைவிற்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.