ஓமன் நாட்டை தாக்கிய மெகுனு புயலில் 3 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

231

ஓமன் நாட்டை தாக்கிய மெகுனு புயலில் சிக்கி 3 இந்தியர்கள் உட்பட 11 உயிரிழந்துள்ளனர்.

அரேபிய நாடுகளுல் ஒன்றான ஓமனில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். இந்த நிலையில், அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் ஓமன் நாட்டை பயங்கரமாக தாக்கியது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய அதிக பயங்கர புயலால் சலாலா என்ற நகரம் சின்னாபின்னமானது. இந்த புயலில் 3 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து உள்ளனர். பலியான இந்தியர் ஒருவரின் பெயர் ஷாம்சர் அலி எனவும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 145 இந்தியர்கள் சலாலாவில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.