ரியோ ஒலிம்பிக் துளிகள்…

265

எங்கும் பசுமை
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோ நகரில் அடிக்கடி சுற்றுலா பாதுகாப்பு மாநாடுகள் நடைபெறும். ஒலிம்பிக் போட்டியிலும் சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு விளையாட்டு அணியும் வரும்போது அதனுடன் ஒரு சிறுவன் அல்லது சிறுமி மரக்கன்றை ஏந்தியபடி வந்தனர்.

வீரர்கள் காடு
அணி வகுப்பில் பங்கேற்ற ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மரத்தின் விதையும், சிறிது அளவு மண்ணும் வழங்கப்பட்டது. அதை அவர்கள் செல்லும் வழியில் உள்ள ஒரு கண்ணாடி பேழையில் வைத்தனர். மொத்தம் 11,000 வீரர்களுக்கு இவை வழங்கப்பட்டன. இந்த விதைகள் அனைத்தும் பின்னர் எடுத்து செல்லப்பட்டு ஒரே இடத்தில் விதைக்கப்படுகின்றன.
அந்த பகுதியில் விளையாட்டு வீரர்களின் காடு வளர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ரிக் ஷா
ஒவ்வொரு அணியும் நடந்து வரும்போது அந்த நாட்டை குறிக்கும் பெயர் பலகையை சைக்கிள் ரிக் ஷாவில் ஏந்தியபடி ஒருவர் ஓட்டி வந்தார். அதில் செடிகள், பூந்தொட்டிகள் இடம்பெற்றிருந்தன. இந்த ஒலிம்பிக் போட்டியின் முக்கிய முழக்கமே பூமியை காப்போம், பசுமையை பேணுவோம் என்பதுதான். அதன் அடிப்படையில்தான் நடன நிகழ்ச்சிகள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பசுமை கொஞ்சும் வகையில் உடை அணிந்து வந்திருந்தனர்.

 • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்
  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்
 • புதிய இணையதளம் அறிமுகம்| இணையவழி வருமான வரி செலுத்தும் வசதி !
  புதிய இணையதளம் அறிமுகம்| இணையவழி வருமான வரி செலுத்தும் வசதி !
 • ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
 • ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ்வின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித
  ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ்வின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித
 • இளம்பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தி சென்ற சம்பவம் !
  இளம்பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தி சென்ற சம்பவம் !

ஒலிம்பிக் தீபம்
இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் நாட்டின் மரத்தான் வீரர் வண்டேரிலே டி லிமா ஏற்றினார். இவர் 2004–ம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியின் போது ஒருவரால் தாக்கப்பட்டு 3–வது இடத்தை பிடித்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவாரா? என்ற கேள்விகை கால்பந்து மன்னன் பிலே எழுப்பியிருந்தார்.
இருந்தாலும் டி லிமா உற்சாகத்துடன் படிகளில் ஏறி தீபத்தை ஏற்றினார். அப்போது அங்கு திரண்டியிருந்த 60,000 ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினார்கள்.

மாற்றுத் திறனாளிகள்
விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தபோது ஒவ்வொரு அணியுடனும் சிறுவன், சிறுமி மரக்கன்றுடன் நடந்து வந்தனர். இதில் மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி இல்லாதவர்கள் கூட மரக்கன்றை ஏந்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் 206 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். இந்த முறை முதல் முதலாக தெற்கு சூடான், கொசவா ஆகிய நாடுகளின் வீரர்கள் பங்கேற்றார்கள். கொசவா சார்பில் 8 தடகள வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றார்கள். இங்கிலாந்து சார்பில் பிரபல டென்னிஸ் வீரர் அன்டிமுரே அந்த நாட்டின் அணிக்கு தலைமை தாங்கி வந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சார்பில் 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சம்பா நடனம்
பிரேசில் நாட்டின் பாரம்பரிய நடனம் சம்பா நடனம் ஆகும். இதில் பெண்கள் வண்ண வண்ண உடைகளை அணிந்து நடனமாடி வருவார்கள். தொடக்க விழாவிலும் சம்பா நடனம்தான் முதலில் இடம் பெற்றிருந்தது.

மைதானத்தில் பிரேசில் மரம்
பிரேசில் நாட்டில் அமேசான் மலைக்காடுகள் உள்ளன. 500 வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் மனிதர்கள் குடியேறும்போது எங்கு பார்த்தாலும் காடுகள்தான் இருந்தன. அதிலும் பாவ் பிரசில் என்ற மரம் மிக முக்கியமானதாகும். இது இப்போது அழிவு நிலையில் உள்ளது.
இந்த மரத்தின் பெயரை வைத்துதான் பிரேசில் நாட்டிற்கே அந்த பெயர் வந்தது. அதை நினைவு கூறும் வகையில் மைதானத்தின் தரையில் அந்த மரத்தின் வடிவம் இடம் பெறும் வகையில் ஒளி பாய்ச்சப்பட்டது. அந்த மரத்தின் வழியே ஒவ்வொரு நாட்டின் அணியும் நடந்து செல்லும் காட்சியை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.


மரக்கானா மைதானம்

தொடக்க விழா நடந்த மரக்கானா மைதானத்தில் 60,000 ரசிகர்கள் குழுமியிருந்தனர். தொடக்க விழாவை உலகம் முழுவதும் 300 கோடி பேர் தொலைக்காட்சிகளில் கண்டுகளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரங்கத்திற்கு வெளியே ராணுவ வாகனங்கள், அதிரடிப்படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரங்கத்திற்கு வெளியேயும், உள்ளேயும் சேர்த்து 85,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்கள்
ஒவ்வொரு நாடும் தங்கள் அணியின் வீரர்களை மகிழ்விக்க அந்த நாட்டு தலைவர்களை அனுப்பி வைப்பது வழக்கம். அவ்வாறு 100 நாட்டு தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 25 நாட்டு தலைவர்கள்தான் வந்திருந்தனர்.