36வது ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளில் ஒன்பது போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட இந்தியாவிற்கு, துடுப்பு படகு வீரர் தத்து போக்கேனக்கல் மற்றும் இந்திய ஹாக்கி அணியினர் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

461

36வது ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளில் ஒன்பது போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட இந்தியாவிற்கு, துடுப்பு படகு வீரர் தத்து போக்கேனக்கல் மற்றும் இந்திய ஹாக்கி அணியினர் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, அயர்லாந்திற்கு எதிரான தனது முதலாவது போட்டியில் 3-க்கு 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
படகு போட்டியில் துடுப்பு படகு 1,500 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் தத்து போக்கேனக்கல் ஆடவர் ஒற்றையர் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறினார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஜித்து ராய் 8 வதாக வந்து தோல்வியடைந்தார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய மகளிர் அணியின் அபூர்வி சண்டேலா, அயோனிகா பவுல் தகுதிச்சுற்று போட்டியிலேயே தோல்வியடைந்தனர்.
டென்னிஸில் லியாண்டர் பயஸ் மற்றும் போபண்ணா இணை முதல் சுற்றில் தோல்வியடைந்து,வெளியேறியது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகளிர் அணியின் மவுமா தாஸ், மணிகா பத்ரா மற்றும் ஆடவர் பிரிவில் சௌமாஜித் கோஸ் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர்.
பளு தூக்கும் போட்டியில் ஒற்றையர் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின்
மீராபாய் சானு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், மற்றொரு நீச்சல் வீரரும் செய்திகளில் இடம் பெற்றுள்ளார். அகதிகள் ஒலிம்பிக் அணியைச்சேர்ந்த நீச்சல் வீரர் யூஸ்ரா மர்தினி. சிரியாவைச் சேர்ந்த இவர் தனது உயிரை பணயம் வைத்து மத்திய தரைக்கடலை கடந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.
இதனிடையே, பதக்கப்பட்டியலில் அமெரிக்காவும், தென்கொரியாவும் தலா ஒரு தங்கம் மற்றும்ஒரு வெள்ளி பதக்கத்துடன் முதல் இடத்தில் இருக்கின்றன.