ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.

133

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கான அறையில் உரிய வசதிகள் இல்லை என இந்திய ஹாக்கி சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் பிரேசிலில் தொடங்குகிறது. இதில், இந்தியா சார்பில் 120 வீரர்-வீராங்கனைகள், 15 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் வீரர் – வீராங்கனைகள் தங்குவதற்கு ரியோடி ஜெனிரோ நகரில் விளையாட்டு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்தில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதத்தில், இந்திய ஹாக்கி வீரர்கள் காற்றடிக்கப்பட்ட பை போன்ற சேரில் அமர்ந்து உள்ளவாறு இருக்கும் புகைப்படங்களும் சமூக வளைதளங்களில் வெளியாகி உள்ளன.