பயணியிடம் அத்துமீறிய ஓலா ஓட்டுநர்..!

277

பெங்களூருவில் ஓலா ஓட்டுநர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரின் கண்ணாடி வழியாக ஓட்டுநர் தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்ததாகவும், பின்னர் செல்ஃபோனை எடுத்து தமக்குத் தெரியும்படி வைத்துக்கொண்டு அதில் ஆபாசப்படங்களை காண்பித்ததாகவும், அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும் தாம் காரை நிறுத்த வலியுறுத்தியும் அந்த ஓட்டுநர் நிறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்புடைய ஓட்டுநர் விரைவில் நீக்கப்படுவார் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. தனியார் கார் நிறுவனங்களின் ஓட்டுநர்கள் தனியாக பயணிக்கும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவது, தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.