ஒகி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் வருகை | குமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு ..!

639

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படையினரின் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஒகி புயல் கோரத்தாண்டவத்தால், குமரி மாவட்டம், கேரள மற்றும் லட்சத் தீவுகள் கடும் பாதிப்பை சந்தித்தன. இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் புயல் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். புயலால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர், பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். பிரதமரை சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், முதல்வர் பழனிசாமியும் குமரிக்கு வர உள்ளனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி, ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடைபெற்றது.