ஒகி புயலால் காணாமல் போன கடலூர் மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு.

458

ஒகி புயலால் காணாமல் போன கடலூர் மீனவர்கள் 19 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் மற்றும் கேரளாவை ஒகி புயல் தாக்கியது. இதில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமானார்கள், பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மாயமானவர்கள், உயிரிழிந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன.
இந்நிலையில் ஒகி புயலில் காணாமல் போனவர்களாக அறிவிக்கபட்ட 19 கடலூர் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 2-ம் தேதி காணாமல் போன 19 கடலூர் மீனவர்களின் விவரங்கள் அரசு இதழில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.