பெட்ரோல் பங்க் இயந்திரங்கள் சரிபார்க்க, 24 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தொழில்துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

ஒசூர் அருகே சூளகிரியில் இயங்கி வரும் இந்துஸ்தான் பெட்ரோல் பங்கில், தொழில்துறை துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பெட்ரோல் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதற்கான முத்திரையிடுவதற்கு, கிருஷ்ணகிரி ஆய்வாளர் ராமு, 24 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பங்க் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், ரசாயணம் தடவி நோட்டுகளை தொழில்துறை துறை அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். ஊழியர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் போது, மறைந்திருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.