ஒடும் ரயிலில் ஆறு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாதுகாப்புக்கு சென்ற காவல் உதவி ஆணையர் உட்பட ஒன்பது பேர் மீது நடவடிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.

232

ஒடும் ரயிலில் ஆறு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பாதுகாப்புக்கு சென்ற காவல் உதவி ஆணையர் உட்பட ஒன்பது பேர் மீது நடவடிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட வங்கி பணத்தில் 5 கோடியே 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ரயில்வே போலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில், இந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சேலம் ரயில் நிலையத்தில், பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட இடம் மற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடமும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பணம் கொள்ளை போன இடம் குறித்து இதுவரை எந்த உறுதியான தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ரயில் பெட்டியில் வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க 70 பேர் கொண்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை, சேலம், ஈரோடு, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா மூலம் தடவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர். பணம் கொண்டு வரப்பட்ட ரயிலில் பாதுகாப்புக்கு சென்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.