ஒடிசாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

148

ஒடிசாவில் கனமழையை தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, ராயக்கடா மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்களை ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் வழங்கினர்.