ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்காக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

226

ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்காக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிரசவத்தின் போது குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அவற்றை குறைக்கும் வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் அவரகளது உறவினர்களால் தோளில் சுமந்த படியும், கட்டை வண்டியில் வைத்து தள்ளிய படியும், நடந்தும் மருத்துவமனைக்கு வந்து சேரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, கர்ப்பிணிகள் மருத்துவமனை வந்து சேர்வதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.