‘குர்ஜி ஒடிசா 2019’ என்ற பெயரில் விவசாய கண்காட்சி

77

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ‘குர்ஜி ஒடிசா 2019′ என்ற பெயரில் தொடங்க உள்ள விவசாய கண்காட்சியை முன்னிட்டு முதலமைச்சர் நவீன் பட்நாயக் லோகோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

புவனேஷ்வரில் குர்ஜி ஒடிசா 2019’ என்ற பெயரில் விவசாய கண்காட்சி வரும் 15ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒடிசாவில் சர்க்கரை வள்ளிக்கிழக்கு உற்பத்தியில் முதல் மாநிலமாக விளங்குகிறது. இதனை பெருமைப்படுத்தும் விதமாக பொம்மை லோகோ ஒன்றை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். இந்த விவசாய கண்காட்சியில் பங்கேற்க 18 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் தொழிற்நுட்ப வல்லுநர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.