அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்யே விமானத்தில் கடைசி பயணத்தை நிறைவு செய்தார்.

0
132

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்யே விமானத்தில் கடைசி பயணத்தை நிறைவு செய்தார்.
அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற 20 ஆம் தேதி நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சிக்காகோ சென்ற ஒபாமா, அங்கு தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் தனது கடைசி பயணத்தை அவர் மேற்கொண்டார். அதிநவீன வசதிகளை கொண்ட ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஒபாமா இதுவரை 445 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY