நியூசிலாந்தில் இந்திய இளைஞர் படுகொலை… இளம் பெண்ணை கைது செய்து காவல்துறை விசாரணை

187

நியூசிலாந்து நாட்டில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் இளம் பெண் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடர்ந்து இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் தியோல் என்ற இளைஞர் நியூசிலாந்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் ஹோட்டல் மேலாண்மை படித்து விட்டு அங்கு, பணிபுரிந்து வந்த ஹர்தீபுக்கு இளம் பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து, அந்த பெண் ஹர்தீபை பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை அந்த நாட்டு காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இறந்த வாலிபரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளனர்.