நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது !

383

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் காரைநகர் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.