அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் இந்தியா இடம் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் சியோல் மாநாடு நிறைவடைந்தது.

170

என்.எஸ்.ஜி.,யி்ல் உறுப்பினராக இந்தியா தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா உள்ளிட்ட 5 நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அணுசக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் சியோல் நகரில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முன்னதாக , இந்தியா என்எஸ்ஜியில் இடம் பெற ஆதரவு தெரிவித்த சுவிட்சர்லாந்து, இந்த கூட்டத்தில், அணுஆயுத பரவல் தடை கூட்டத்தில் கையெழுத்திடாத இந்தியா என்எஸ்ஜி.,யில் இடம்பெறுவது குறித்து கவலை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணுசக்தி பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியாவையோ, பாகிஸ்தானையோ ஆதரிக்க மாட்டோம் என சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது. பிரேசில், ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, என்எஸ்ஜியில் இந்தியா இடம் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் சியோல் கூட்டம் நிறைவடைந்தது.