தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

202

தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சுப்ரமணியம் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதனிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக ஆண்டிப்பாளையம் கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியே செல்பவர்கள் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.