நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய்க்கு விற்கப்படும் – தமிழக அரசு

335

ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 25 ரூபாயாக விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தற்போது நியாய விலைக்கடையில் சர்க்கரை கிலோவிற்கு 13 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நவம்பர் 1-ஆம் தேதி முதல் சர்க்கரை கிலோ ஒன்று 25 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேசன் கார்டுகளுக்கு மட்டும் 13 ரூபாய் 50 பைசாவிற்கு சர்க்கரை விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு அறிவிப்பின்படி, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 18 லட்சத்து 64 ஆயிரம் பேர் மட்டுமே ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவிற்கு வாங்க முடியும். மேலும், அரசின் புதிய உத்தரவால், குடும்ப அட்டை வைத்துள்ள சுமார் ஒரு கோடியே 88 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.