உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சம்பள உயர்வு உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அரசு பேருந்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதித்ததோடு, ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், போராட்டத்தை கைவிட ஊழியர்கள் மறுத்து விட்டனர். இந்தநிலையில், ஊழியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராததற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.