ஐ.நா. மேற்கொண்டுள்ள புதிய பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் : வடகொரியா எச்சரிக்கை..!

2108

ஐ.நா. மேற்கொண்டுள்ள புதிய பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க ஐ.நா.சபை முடிவு செய்து தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தால், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த தீர்மானம் தங்கள் நாட்டின் இறையாண்மை மீது திணிக்கப்பட்ட வன்முறை செயல் என குறிப்பிட்ட வடகொரியா, இது போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.