பொருளாதார நெருக்கடியால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – வடகொரியா அறிவிப்பு.

674

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது.
வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்ததன் விளைவாக அமெரிக்கா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடை விதித்தன. இதன் காரணமாக வட கொரியாவால் எந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் வட கொரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக இருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.