பிலிப்பைன்ஸ் நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

327

பிலிப்பைன்ஸ் நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பிலிபினோ என்ற நட்சத்திர விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்குள் நேற்றிரவு திடீரென முகமூடி அணிந்து உள்ளே புகுந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்
அங்கு மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் விடுதி கட்டடம் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து விரைந்த வந்த வந்த ராணுவத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து நட்சத்திர விடுதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.