வடகொரியாவில் சுற்றுலா சென்ற போது பிரச்சார பதாதைகளை திருடியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் கோமா நிலையில் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

344

வடகொரியாவில் சுற்றுலா சென்ற போது பிரச்சார பதாதைகளை திருடியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் கோமா நிலையில் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வடகொரியாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஒட்டோ வார்ம்பியர் என்ற இளைஞர் குடும்பத்துடன் சென்றார். அப்போது அந்நாட்டின் பிரச்சார பதாதைகளை
ஒட்டோ திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீதான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் எனக்கூறி ஒட்டோவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. மேலும் சிறையில் கடினமான வேலைகளை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இளைஞர் ஒட்டோ கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து 17 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த ஒட்டோவை வடகொரியா தற்போது விடுதலை செய்துள்ளது.அமெரிக்காவுக்கு திரும்பிய அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். சிறையில் கொடுரமாக தாக்கப்பட்டதே, ஒட்டோ கோமா நிலைக்கு சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர