தங்கள் வான் எல்லையில் பறக்கும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும் – வடகொரியா!

360

தங்கள் வான் எல்லையில் பறக்கும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும் என அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியாவின் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வடகொரியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் வார்த்தை போரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுடைய நாட்டிற்கு எதிராக போரை அறிவித்ததால், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், தங்களின் வான் எல்லையில் பறக்கும் அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும் என வடகொரியா அறிவித்துள்ளது.