கைவரிசைக் காட்டிய வட மாநில கொள்ளையர்கள் | அதிரடியாக கொள்ளையர்களை சுற்றிவளைத்த போலீஸார்..

1049

தமிழகத்தில் நடைபெற்ற தொடர் ஏ.டி.எம் திருட்டுகளில் தொடர்புடைய 5 வட மாநில கொள்ளையர்களை போலீஸார் ட்ரோன் உதவியுடன் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து 30 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனிடையே நாமக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்கள் போலீஸாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக அவர்களை விரட்டி சென்றுள்ளனர். அப்போது பொம்மைகுட்டைமேடில் ஒரு காரை மட்டும் நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் அருகே இருக்கும் புதர்களில் மறைந்துக்கொண்டனர். இதனையடுத்து பொம்மைகுட்டைமேடு பகுதியை சுற்றிவளைத்த 50க்கும் மேற்பட்ட போலீஸார், கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் வீட்டின் மாடியில் மறைந்திருந்த ஒரு வாலிபரும், புதர்களில் பதுங்கியிருந்த 4 பேரும் பிடிக்கப்பட்டனர்.