வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

419

வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளுக்கு இடையே மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்,
அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் 7 செ.மீ. மழையும், கந்தர்வக்கோட்டையில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.