முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச தயாராக இருப்பதாக இலங்கை வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

559

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச தயாராக இருப்பதாக இலங்கை வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையின் கடல் வளங்களை, தென்னிந்திய மீனவர்கள் அள்ளிச் செல்வதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக இந்திய வெளியுறுவுத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளதாக விக்னேஸ்வரன் கூறினார். பாரம்பரியம் என்ற பெயரில் கடல் வளங்களை முற்றிலும் அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக மீனவர்கள் 49 பேர் தங்கள் கடல் பகுதிக்கு வந்ததால் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கூறிய விக்னேஸ்வரன், இந்த பிரச்சினை தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.