வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் போர் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

382

வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் போர் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வட கொரியாவின் செயல்பாடுகளுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட், வட கொரிய அதிபர் கிம் ஜோங் யுன்னை போர் வெறி பிடித்தவர் என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் கிம் ஜோங்கின் அணு ஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்கப் போகிறது என்று அவர் கவலை தெரிவித்தார். இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என டியுடெர்ட் வலியுறுத்தியுள்ளார்.