வடகொரிய அதிபரை 3-வது முறையாக சந்திக்க டிரம்ப் திட்டம்..!

316

அமெரிக்க அதிபர் டிரம்பை எச்சரிக்கை வகையில், அதிநவீன ஆயுத சோதனையை நடத்தி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிர வைத்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள், ஏவுகணை சோதனைகளை வடகொரியா அரங்கேற்றியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் 2 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அபபோது, தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வடகொரியா கோரிக்கை வைத்தது.

ஆனால் எதிர்பாராத வகையில் 2-வது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வடகொரிய அதிபரை 3–வது முறையாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆயுதம் பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இந்த சோதனையை நடத்தி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.