வடதமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்-சென்னை வானிலை ஆய்வு மையம்!

392

வடதமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா ஒட்டி உள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.