ரஜினிகாந்துக்கு அரசியல் வேண்டாம், ஒரு ரசிகனாக கே.எஸ். அழகிரி ஆலோசனை

98

ரஜினிகாந்துக்கு அரசியல் வேண்டாம் என ஒரு ரசிகனாக கூறுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆலோசனை தெரிவித்தார்.

சென்னை சத்யமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப்பிரிவின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயம் மாநில நலன்களுக்கு பாதகமாக அமையும், கர்நாடகாவில் பாஜகவின் திட்டம் தோல்வியடையும் என்று தெரிவித்த அவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ரஜினி ரசிகர்கள் முடிவு செய்ய முடியாது என்றும் கூறினார். மேலும், ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என ஒரு ரசிகனாக கே.எஸ்.அழகிரி ஆலோசனை தெரிவித்தார்.