என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

198

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் 25 ஒப்பந்த தொழிலாளர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இன்று 25 ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி இடமாற்றம் செய்யாமல், ஒரே இடத்தில் பணி வழங்கக் கோரி சுரங்கம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு முயற்சித்த 25 பேரும் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் அருந்தியதில் 6 பேருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.