பணி நிரந்தரம், பணியில் முன்னுரிமை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி.

212

சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் தலைமையில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், என்.எல்.சி. நிர்வாகமும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டன. கடந்த 3 முறை நடைபெற்ற பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததின் அடிப்படையில், ஒப்பந்த தொழிலாளர்கள் ஜுன் மாதம் 11ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு நிர்வாகமும் அரசும் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தனர். இதன் அடிப்படையில் அன்றைய தினமே போராட்டத்தைக் கைவிட்டு, பேச்சு வார்த்தைக்கு சென்றனர். கடந்த 11ம் தேதி நடைபெற்ற 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து, இன்று 5ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு சென்றனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், ஜூலை மாதத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிக்க இருப்பதாக, ஜுவா தொழிற்சங்க நிர்வாகி சேகர் அறிவித்துள்ளார். நடைபெற உள்ள போராட்டமானது குடும்பத்துடன் கூடிய பட்டினி போராட்டமாகவும், காலவரையற்ற வேலைநிறுத்த பேராட்டமாகவும் அமையும் எனவும் கூறியுள்ளனர்.