மாணவர் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் !

215

சென்னையில் மாணவர் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கூடுதல் காவல்துறை ஆணையர் சேஷசாய் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 23 ம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 142 காவலர்கள் காயமடைந்ததாக தெரிவித்தார். காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 100பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வன்முறைக்கு மாணவர்கள் காரணம் கிடையாது என்று சேஷசாயி தெரிவித்தார்.