விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

181

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி, கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஒட்டபிடாரம், உள்ளிட்ட பல பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால், இங்கு பயிரிடப்பட்ட
கம்பு , மக்காசோளம், மிளகாய், பருத்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் கருகின. இந்நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாரதிய கிசான் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய்
நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி , காய்ந்த பயிர்களுடன்
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.