மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால் வெட்ட வேண்டும்-எம்.பி நித்யானந்த் ராய்!

463

பிரதமர் மோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால், அதனை வெட்ட வேண்டும் என பீகார் மாநில பாஜக மூத்த தலைவரும், எம்.பி-யுமான நித்யானந்த் ராய் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் துணை முதலமைச்சர் சுஷில் மோடி பங்கேற்ற கூட்டத்தில், பேசிய அவர், ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவர் கடுமையான உழைப்பினால் பிரதமரானதற்கு, அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடிக்கு எதிராக யாராவது கை அல்லது விரலை நீட்டினால், அதனை உடைக்க வேண்டும், அல்லது வெட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தனது கருத்தை தேச விரோதிகளும், ஏழைகளுக்கு எதிரானவர்களும் தான் எதிர்ப்பார்கள் என்றும் எம்பி நித்யானந்த் ராய் கூறினார். ஏழைகளாக காப்பவராக பிரதமர் இருப்பதாக கூறிய அவர், வேறு எந்த சக்திகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் தெரிவித்தார். பாஜக எம்பி நித்யானந்த் ராயின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.