நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணியில் மத்திய நிதியமைச்சகம் தீவிரம்..!

93

2019-20ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நிதி அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. அதன்படி முதல் மக்களவை கூட்டம், விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுத்துறை நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளுடம் அவர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். பட்ஜெட்டில் பொதுத்துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி விவரங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.