மத்திய அமைச்சரவைக்குழு மாற்றியமைப்பு : நிர்மலா சீத்தாராமனுக்கு முக்கியத்துவம்

284

மத்திய அமைச்சரவைக்குழுவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

மத்திய அமைச்சரவையை கடந்த மூன்றாம் தேதி பிரதமர் மோடி மாற்றியமைத்தார். அதன்படி, நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்றார். இந்நிலையில், மத்திய அமைச்சரவைக்குழுக்களை பிரதமர் மோடி மாற்றியமைத்துள்ளார். அதன்படி, பாதுகாப்புத்துறை, அரசியல் விவகாராம் மற்றும் பொருளாதார விவகாரம் ஆகிய மூன்று குழுக்களில் நிர்மலா சீத்தராமன் இடம் பெற்றுள்ளார். இந்த குழுவில் ஏற்கனவே ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளனர். இதேபோன்று, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய
அமைச்சரவை குழுவில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.