பேராசிரியை நிர்மலா தேவி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்..!

657

உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதுள்ள புகார் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில், கணித பிரிவில் உதவி பேராசிரியையாக நிர்மலா தேவி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கல்லூரி மாணவிகள் 4 பேருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்து போல் பேசியுள்ளார். இதற்கு உடன்பட்டால் 85 சதவீத மதிப்பெண்களுடன் அதிக பணமும் வழங்குவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் நிர்மலாவை 15 நாட்கள் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து நிர்மலா தேவி மீதுள்ள புகார் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.இதனிடையே, நிர்மலா தேவியை கண்டித்து, கல்லூரி முன்பாக மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், நிர்மலா தேவியை உடனே கைது செய்ய வலியுறுத்தினர்.