பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கினார் ஆளுநர்.

704

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்திற்கு மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இவர் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை, பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணை ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அதிகாரி சந்தானம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் சந்தானம் விரைவில் விசாரணை நடத்துகிறார்.