நிர்மலா சீத்தாராமனை வருமான வரித்துறை வழக்கறிஞராக நியமிக்கலாம் – டிவிட்டரில் ப.சிதம்பரம் கிண்டல்.

1007

நிர்மலா சீத்தாராமனை அமைச்சர் பதவிலிருந்து நீக்கிவிட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்துள்ளது பற்றி அவரிடம் ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா? என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள சிதம்பரம், இந்தியாவின் மிகப் பணக்காரக் கட்சியின் தலைவர் கோடிக்கணக்கான டாலர்களைப் பற்றிக் கனவு காண்பதாகவும், அந்த பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியதுதானே எனவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீத்தாராமனை நீக்கிவிட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக அவரை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ள சிதம்பரம், அவரை பார் கவுன்சிலுக்கு வரவேற்கிறோம் எனவும் கூறியுள்ளார்.